அடேங்கப்பா.. இம்புட்டா!! லியோ படத்தில் நடிக்க திரிஷா வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவுனு பார்த்தீங்களா!!Actress Trisha salary for act in leo movie

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை திரிஷா. சில ஆண்டுகளாக இவருக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு கம்பேக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். தொடர்ந்து அவருக்கு தற்போது அடுத்தடுத்ததாக பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

trisha

இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடிப்பதற்காக திரிஷா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அவர் லியோ படத்தில் நடிக்க ரூ 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். அடுத்ததாக மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க அவர் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது