AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
ஒரு வயசாச்சு.. ஜாம் ஜாம்னு நடிகை திரிஷா வீட்டில் நடந்த கொண்டாட்டம்.! வைரல் புகைப்படங்கள்!!
தென்னிந்திய சினிமாவில் தனது அழகால் திறமையான நடிப்பால் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை திரிஷா. 22 ஆண்டுகளாக சினிமா துறையையே கலக்கிவரும் அவர் 40 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் சிங்கிளாகவே உள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது அவரைப் பற்றிய வதந்திகள் பரவி வருவதும் வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட நடிகை திரிஷாவிற்கும், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி என த்ரிஷா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தற்போது தமிழில் சூர்யாவுடன் இணைந்து கருப்பு என்ற படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை திரிஷா தனது செல்ல நாய்க்குட்டி இஸ்ஸிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஒரு வயசாச்சு.. தனது செல்ல மகளின் பிறந்தநாளை ஹேப்பியாக கொண்டாடிய நடிகை திரிஷா.! வைரல் புகைப்படங்கள்!!