16 வயதில், மிஸ் சென்னை பட்டம் வென்ற நடிகை திரிஷா.! அப்போ எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!

16 வயதில், மிஸ் சென்னை பட்டம் வென்ற நடிகை திரிஷா.! அப்போ எப்படியிருந்துள்ளார் பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம்!!


Actress trisha miss chennai award winning photo viral

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகமுக்கியமான குந்தவை கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் குந்தவையாக திரிஷாவின் நடிப்பைக் காண ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

நடிகை திரிஷா நடிக்க வருவதற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார். இதனை நடிகர் ஜெயம் ரவி கூட அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

trisha