வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அப்படிதான் பிளான் செய்திருந்தேன் ஆனால்.. திருமணம் குறித்து ஓப்பனாக உடைத்த நடிகை தமன்னா!!
தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து அவர் கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். நடிகை தமன்னா அஜித், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் காவாலா பாடலிற்கு இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்ததாக தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை தமன்னாவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது அவர், நான் சினிமாவில் நடிக்க வந்தபோது 10 ஆண்டுகள் மட்டும் நடித்துவிட்டு 30 வயதில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடலாம் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து படம், வெப்சீரிஸ்க்கான வாய்ப்பு வந்து கொண்டிருப்பதால் என்னால் நடிப்பில் இருந்து விலக முடியவில்லை.
திருமணம் என்பது மிக பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தான் தயாராகி விட்டதாக உணரும்போது திருமணத்தை திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் எனது திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். அதற்கான நேரம் நெருங்கி வருவதாகவே நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.