சினிமா

தன்னிடம் சொல்லாமலேயே திடீரென லிப்-லாக் முத்தம் கொடுத்தார் கமல்ஹாசன்! பலவருடங்ககுக்கு பிறகு வைரலாகும் நடிகையின் வீடியோ!

Summary:

actress talk about kiss scene

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா, டெல்லி கணேஷ், ஶ்ரீவித்யா உட்பட பலர் நடித்திருந்த படம், "புன்னகை மன்னன்". இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் லிப்-லாக் முத்தக்காட்சியாக புன்னகை மன்னன் படத்தை தான் சொல்வார்கள்.

கவிதாலாயா நிறுவனம் சார்பில் கே.பாலசந்தரே தயாரித்திருந்த இந்தப் படம் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் காதலர்களான கமல்ஹாசனும் ரேகாவும் தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள். தற்கொலைக்கு முன் சாகப்போகும் தருவாயில் கமல்ஹாசன் ரேகாவுக்கு திடீரென லிப் லாக் முத்தம் கொடுப்பார்.

இந்நிலையில் இந்தப் படம் பற்றி சமீபத்தில் நடிகை ரேகா பேட்டி கொடுத்திருந்தார். அதில் இயக்குனரோ, கமல்ஹாசனோ எனக்கு முத்தம் கொடுப்பது போல காட்சியை எடுக்கப் போகிறோம் என்று சொல்லவில்லை. என்னிடம் சொல்லாமல் திடீரெனதான் கமல்ஹாசன் முத்தம் கொடுத்தார் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்தப் பேட்டியை, தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். ரேகா இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலும் பாலசந்தரும் அப்படி செய்திருக்க கூடாது எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 


Advertisement