சினிமா

அட! நடிகை ஸ்ரீதிவ்யா இது? கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! சும்மா அள்ளுதே!!!

Summary:

நடிகை ஸ்ரீதிவ்யா துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

பின்னர் ஸ்ரீ திவ்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல்  இருக்கும் ஸ்ரீதிவ்யா சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு பிஸியாக உள்ளார். தற்போதும் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் டெடிபியர் உடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் என்னவொரு அழகு என வர்ணித்து வருகின்றனர். 


Advertisement