சினிமா

அட! நடிகை சினேகாவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? இந்த பெயரும் நல்லா இருக்கே!

Summary:

Actress sneha real name Suhashini Raja Ram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்னேகா. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் என்னவளே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வசீகரா, பார்த்திபன் கனவு, வசூல் ராஜா MBBS போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற்றியது.

இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற மலையாளம் திரைப்படம்தான் நடிகை சினேகாவின் முதல் திரைப்படம். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பலவேறு மொழி படங்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஸ்னேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது பட்டாஸ், வான் என இரண்டு படங்களில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ஸ்னேகா. பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும்போது தங்கள் உண்மையான பெயரை மாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை சினேகாவும் தனது உண்மையான பெயரை சினிமாவிற்காக மாற்றியுள்ளார். இவரது உண்மையான பெயர் சுஹாசினி. சினிமாவிற்காக தனது பெயரை ஸ்னேகா என மாற்றிக்கொண்டார் நடிகை ஸ்னேகா.


Advertisement