
அட நம்ம புன்னகை அரசி சினேகாவா இது... பல வருடங்களுக்கு முன்பு கையில் விருதுடன் எப்படி உள்ளார் என்று பாருங்கள்...
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. சிரிப்பழகி என அனைவராலும் அழைக்கப்பட்ட சினேகாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியான சினேகா சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். சினேகா பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் நடிகை சினேகா தற்போது பல முன்னணி நடிகர்களுள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் விருதுடன் தனது அக்காவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement