வாவ்.. சூப்பர்! பிக்பாஸ் சீசன் 5ல் இந்த பிரபலத்தின் மகள் கலந்துகொள்கிறாரா? தீயாய் பரவி வரும் தகவல்!!

வாவ்.. சூப்பர்! பிக்பாஸ் சீசன் 5ல் இந்த பிரபலத்தின் மகள் கலந்துகொள்கிறாரா? தீயாய் பரவி வரும் தகவல்!!


Actress shakila daughter going to participate in bigboss 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் மற்றும்  பிக்பாஸ் சீசன் 4 ல் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஐந்தாவது சீசனுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

shakeela

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகையும், குக் வித் கோமாளி பிரபலம் ஷகிலாவின் மகள் திருநங்கையான மிலாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.