என்னது.. கர்ப்பமா இருக்காரா.!! சன் டிவியின் டாப் சீரியலிருந்து திடீரென விலகிய கதாநாயகி!! ரசிகர்கள் ஷாக்!!Actress shabana releaving frkm Mr. Manaivi serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற சூப்பர் ஹிட்டான தொடர் செம்பருத்தி. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஷபானா. செம்பருத்தி தொடர் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நன்கு ரீச்சாகியது. இந்த நிலையில் திடீரென நடிகை ஷபானா மிஸ்டர்.மனைவி சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவியது.

Shabana

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து நடிகை ஷபானா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் கர்ப்பமாக இல்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக பலரும் வாழ்த்து கூறினார்கள். ஆனால் அது காரணமில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் நான் அதனை சந்தோசமாக உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் எனக் கூறியுள்ளார்.

Shabana