இந்த வயதில் இவ்ளோ சின்ன பெண்ணுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபாஸ்.! கடுப்பான ரசிகர்கள்..
2002ஆம் ஆண்டு "ஈஸ்வர்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் பிரபாஸ். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்பெக்ட் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் பிரபாஸ் நடித்துள்ளார். பில்லா தெலுங்கு படத்திலும் இவர் நடித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுளி இயக்கிய "பாகுபலி" இரண்டு பாகங்களிலும் பிரபாஸ் மிக அருமையாக நடித்திருந்தார். இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து பான் இந்தியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.
சமீபத்தில் இவரது "ஆதி புருஷ்" படம் வெளியானது. தொடர்ந்து இவர் சலார் பார்ட் 1, கல்கி, ராஜா டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கல்கி படத்தில் கமலஹாசனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் எனவும், இதன் பட்ஜெட் 500 கோடி எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து சீதா ராமம் படத்தை இயக்கிய ஹனு ராகவபுடியின் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறாராம். இவரது வயது 22 என்பது தற்போது பேசுபொருளாக உள்ளது.