நீச்சல் குளத்தில் பணிப்பெண்ணை தள்ளிவிட்டு தனுஷ் நடிகை செய்த காரியம்! விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்! வீடியோ இதோ!!

நீச்சல் குளத்தில் பணிப்பெண்ணை தள்ளிவிட்டு தனுஷ் நடிகை செய்த காரியம்! விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்! வீடியோ இதோ!!


actress-sara-alikhan-shared-prank-video

நடிகை சாரா அலிகான் தன் பணிப்பெண்ணை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட வீடியோவை வெளியிட்ட நிலையில் அது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அத்ரங்கி ரே. இந்தப் படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது.  இந்த படத்தில் நடிகர் தனுஷின் மனைவியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான். இப்படத்தில் இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்தது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா அலி கான் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர், நீங்கள் செய்த மோசமான பிராங்க் எது? என கேட்டுள்ளார். அதற்கு சாரா அலி கான், பணிப்பெண் ஒருவரை  எதிர்பாராத நேரத்தில் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு பின் தானும் உள்ளே குதித்து ஜாலியாக நீச்சல் அடிக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அது வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் இதெல்லாம் காமெடி கிடையாது. நீங்கள் செய்த காரியத்தால் அந்த பெண் எப்படி அதிர்ச்சி அடைந்துள்ளார் பாருங்கள். உங்கள் ஜாலிக்காக அவரைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என விமர்சனம் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.