சினிமா

ரேணிகுண்டா நடிகை சனுஷா தற்கொலை முயற்சியா? இதுதான் காரணமா? உருக்கமாக அவரே வெளியிட்ட வீடியோ!

Summary:

நடிகை சனுஷா தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்தும், அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் சனுஷா.  அதனைத் தொடர்ந்து அவர் ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சனுஷா எத்தன், அலெக்ஸ்பாண்டியன்,  கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்சி என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சனுஷா  தனக்கு உருவான தற்கொலை எண்ணம் குறித்தும், எப்படி அதிலிருந்து மீண்டார் எனவும் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,   கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் ரீதியாகவும் கடினமான விஷயங்களை எதிர்கொண்டு இருந்தேன். இதனால் உண்டான மன அழுத்தத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருள் சூழ்ந்தது போல இருந்தது.

ஆரம்பத்தில் மிகவும் பயமாக இருந்தது எனது மனஅழுத்தம் குறித்து நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் எப்படி சொல்வது என தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் என்மீது அன்பு வைத்திருப்பவர்களுக்காக அந்த முயற்சியை கைவிட்டேன்.

 பின்னர் சிகிச்சை பற்றி முடிவு செய்து, மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றேன். உடற்பயிற்சி, யோகா நடைப்பயிற்சி என செய்ய ஆரம்பித்தேன். நான் தற்போது மீண்டும் எனது வாழ்க்கையை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்களும் தளர்ந்து விடாதீர்கள் என கூறியுள்ளார்.


Advertisement