
actress-samantha-uturn-movie
சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம்யூ டர்ன். இந்த படத்தை பவன் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சத்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் தயாரித்திருந்தனர். செப்டம்பர் 14 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.
.
ஒரு சாலையில் நடக்கும் தொடர் விதிமீறல்களும், அதனால் ஏற்படும் மர்ம மரணங்களையும் திரில்லிங்காக சொல்லும் கதைதான் ’யு டர்ன்’.அடுத்தடுத்து நடக்கும் சாலை விதிமீறல் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்துள்ளார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும் நடித்துள்ளார்.இந்த படத்தினை ரூ. 9 கோடிகொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கினர். ஆனால் இந்த படம் ரூ 6.50 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த அளவுக்கு வெற்றி பெறவில்லைசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement