முதல் முறையாக வெளியான நடிகை சமந்தாவின் அம்மா புகைப்படம்! இதோ!Actress samantha mother photo

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சமந்தா மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறினார். தற்போது தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை திருமணம் செய்து தெலுங்கு திரையுலகில் செட்டிலாகிவிட்டார் நடிகை சமந்தா.

samantha

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா.

அதில்,  என்னுடைய தாயின் பிரார்த்தனைகள் எப்போதும் எனக்கு உதவி இருக்கிறது. அது மேஜிக் போன்றது .நான் இப்போதும் கூட அவரிடம் சென்று எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்பேன் கண்டிப்பாக அவர் செய்வது எனக்கு பலனளிக்கும். உண்மையில் அம்மாக்கள் உலகில் கடவுளை விட மேலானவர்கள் என்று பதிவு செய்துள்ளார் சமந்தா.