அடேங்கப்பா.. கின்னஸ் ரெக்கார்டில் புதிய சாதனை படைத்த பிரபல முன்னணி நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்..!!

அடேங்கப்பா.. கின்னஸ் ரெக்கார்டில் புதிய சாதனை படைத்த பிரபல முன்னணி நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்..!!


actress roja name added the guinness book og record

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரோஜா. இவர் 80s காலகட்டத்தில் டாப் நடிகைகளுள் ஒருவராக இருந்தார். அந்த காலகட்டத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கில் அருமையாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் தன் கேரியரில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

தனது திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட ரோஜா, தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுதுறை அமைச்சராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரோஜா கின்னஸ் சாதனை புக்கில் இடம்பெற்றுள்ளார். ஆந்திராவில் உள்ள திருமண மண்டபத்தில் 3000 புகைப்பட கலைஞர்களுக்கு வரவேற்பு விடுக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் ரோஜாவும் கலந்து கொண்டார். 

Roja

கிட்டத்தட்ட 3000 போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும் போது, ரோஜா மேடையில் ஏறியதும் அனைவரும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்தனர். இதுவரையிலும் ஒரே சமயத்தில் 3000 போட்டோக்கள் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று, wonder book of records கின்னஸ் சாதனை புத்தகத்தில் ரோஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Roja