பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இருந்து திடீரென விலகிய நடிகை.! இனி அவருக்கு பதில் இந்த வில்லி நடிகையா!Actress rihaana releaving from pandian stores 2 serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதற்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அண்ணன்- தம்பி பாசத்தை, கூட்டு குடும்ப ஒற்றுமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஒளிபரப்பானது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இதற்கிடையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்து வந்த நடிகை ரிஹானா திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஹானா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் ராஜியின் சித்தி கேரக்டரில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து ரிஹானா விளக்கம் அளித்துள்ளார். 

rihana

அதில் அவர், என்னுடைய தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக நான் சீரியலில் இருந்து விலகுகிறேன். கதையின்படி இந்த கேரக்டர் சீரியலில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் எடுக்க முடியாது. அதனாலே சீரியலிருந்து விலக வேண்டியதாகிருச்சு. உங்க எல்லோர் மாதிரியும் நானும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ரிஹானாவுக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை மாதவி நடிக்கவுள்ளாராம். இவர் சன் டிவியின்  `இனியா' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

rihana