"உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே கல்லறை கட்டிக்கொண்ட பிரபல கமல் பட நடிகை!"

1986ம் ஆண்டு "கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் அறிமுகமானவர் ரேகா. தொடர்ந்து புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், குணா, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ள ரேகா, தற்போது அம்மா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4, வணக்கம் தமிழா, பிக் பாஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் ரேகாவின் தந்தை காலமானார். அவரது தந்தையின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரேகா செய்துள்ள ஒரு செயல் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ரேகா தனது தந்தையின் கல்லறைக்கு பக்கத்திலேயே தனக்கும் ஒரு கல்லறை கட்டியுள்ளார். இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறி வருகின்றனர்.