சினிமா

இறப்பதற்கு முன்னாலே ஏன் இப்படி? நடிகை ரேகா செய்த திடுக்கிடும் காரியத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

actress reka done arrangement for her funeral before dead

தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் . 

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அண்மையில் வெளிவந்த பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது இறப்பு குறித்து கூறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகை ரேகாவின் அப்பாவிற்கு அவர் படத்தில் நடிப்பது பிடிக்கவில்லையாம். மேலும் ரேகா நடித்த ஒரேஒரு படம் மட்டும்தான் அவரது அப்பா பார்த்துள்ளாராம்.

இந்நிலையில் தன் அப்பா மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் நடிகை ரேகா தான் இறப்பதற்கு முன்பதாகவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது அவரின் அப்பாவின் சமாதிக்கு அருகே அவருக்காக கல்லறையை கட்டியுள்ளாராம். மேலும் தான் இறந்த பிறகு அந்த கல்லறையில்தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளாராம்.மேலும் அந்த இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய கூடாதுஎனவும் கூறியுள்ளாராம்.இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement