சினிமா

ஆண் குழந்தைக்கு தாயான சிம்பு பட நடிகை.. வைரலாகும் குழந்தையின் க்யூட் புகைப்படம்.!

Summary:

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்திலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெள

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்திலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ரிச்சா அமெரிக்காவில் எம்.பி.ஏ படிக்கும்போது தன்னுடன் படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லாவை கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தின் மீது தனது கவனத்தை செலுத்தினார். 

இந்நிலையில் நடிகை ரிச்சாவுக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ரிச்சா தனது குழந்தையின் க்யூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Advertisement