சினிமா

பேருந்து நிலையத்தில்.. பலரையும் சிரிக்கவைத்த இவருக்கு இப்படியொரு பரிதாப நிலையா?? புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

Summary:

பேருந்து நிலையத்தில்.. பலரையும் சிரிக்கவைத்த இவருக்கு இப்படியொரு பரிதாப நிலையா?? புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி. சில படங்களில் இவரது நடிப்பு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. ஆரம்பத்தில் ஏராளமான படங்களில் நடித்த அவர் பின்னர் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கடற்கரையில் விளையாட்டு பொருள்கள், கர்சீப் போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

அதனைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு சிகிச்சைக்காக 10ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரங்கம்மா பாட்டி சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் பரிதாபமான நிலையில் படுத்துக் கிடந்துள்ளார்.

அவரை அடையாளம் கண்டுகொண்ட  இளைஞர் ஒருவர் இதுகுறித்து பாட்டியிடம் கேட்டபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை சற்று தேறிய நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்ததாக கூறியுள்ளார். பின்னர் அவருக்கு அந்த இளைஞர் தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ரங்கம்மா பாட்டி மேலே புடவையால் போர்த்தியிருக்க  பரிதாபமான நிலையில் பேருந்து நிலையத்தில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement