என்னது.. அன்பே சிவம் சீரியலில் இருந்து விலகுகிறாரா இந்த பிரபல நடிகை! வெளிவந்த ஷாக் தகவல்!!

என்னது.. அன்பே சிவம் சீரியலில் இருந்து விலகுகிறாரா இந்த பிரபல நடிகை! வெளிவந்த ஷாக் தகவல்!!


actress-raksha-releaving-from-anbe-sivam-serial

தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு வரவேற்பு உள்ளது. மேலும் ஒவ்வொரு எபிசோடுகளையும் ரசிகர்கள் தவறாமல் பார்த்து வருகின்றனர். அவ்வாறு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல் அன்பே சிவம். இந்த தொடரில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ரக்ஷா ஹாலா. இதில் இவர் கணவரை விவாகரத்து செய்த மற்றும் இரு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார். மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்திருந்தார்.

Anbe sivam

அந்த சீரியலின் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சானார். இந்த நிலையில் தற்போது திடீரென அன்பே சிவம் சீரியலில் இருந்து ரக்ஷா ஹாலா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.