புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கடற்கரையில் படு கவர்ச்சியாக பிரபல நடிகை! இது ராய் லட்சுமி ஸ்பெஷல்!
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் பாலிவுட் பக்கம் தாவினார் ராய் லட்சுமி.
சமீபத்தில் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து தனது மௌஸை மீண்டும் புதுப்பித்து கொண்டார்.இந்த படத்தில் பெற்ற பிரபலத்தின் மூலம் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கி வருகிறது.