சினிமா

தலைத்தூக்கும் போதைப்பொருள் விவகாரம்! ஜெயம் ரவி பட நடிகை திடீர் கைது!

Summary:

Actress ragini arrest in bangalore for drug issue

சமீபகாலமாக தலைதூக்கி வரும் போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக குற்றப்பிரிவு போலீசார் தீவிர  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்நிலையில் கன்னட திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக இயக்குனர் இந்திரஜித் குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும் 15 பேரின் பெயர்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் ரவிசங்கர் என்பவரை கைது செய்தனர். 

 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் நடிகை ராகினி திவேதியுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்த நிலையில், ராகினிக்கு விசாரணைக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரால் ஆஜராக முடியாத நிலையில், இன்று அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை  மேற்கொண்டு, அவரை விசாரணைக்காக  கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகினி தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.


Advertisement