சினிமா

இனி மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை நான் எது வேண்டுமானாலும் செய்யலாம்...!

Summary:

actress-radhika-apte-new-photo-release

தமிழ் சினிமாவில் "கபாலி" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ராதிகா ஆப்தே இனி மறைக்க என்னிடம் ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார். 

சினிமாவை நம்பி தேடி வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கூறினார். இந்தி படங்களில் அரைகுறை உடையில், ராதிகா ஆப்தே ஆபாசமாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2015-ஆம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் இணையத்தில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. வாட்ஸ்ஆப்பில் அந்த புகைப்படம் தீயாக பரவியது. அதன் பிறகு 2016-ஆம் ஆண்டில் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே அதில் ஹுசைனுடன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.

நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து லீக்காகி சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்தார் ராதிகா. இந்நிலையில் அவர்  
ஆங்கில படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள ராதிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இணையத்தில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது,

என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார்கள். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். என் நிர்வாண புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்து விட்டது. இனி மறைப்பதற்கு  என்னிடம் எதுவும் இல்லை. நான் எது வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என்று கூறி சிரித்தார் ராதிகா.


Advertisement