ஹாலிவுட்டில் களமிறங்குகிறாரா நடிகை ராசி கன்னா.? தீயாய் பரவும் புகைப்படங்கள்.!?

ஹாலிவுட்டில் களமிறங்குகிறாரா நடிகை ராசி கன்னா.? தீயாய் பரவும் புகைப்படங்கள்.!?



Actress raasi khanna latest Instagram photos viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். முதன்முதலில் ஹிந்தி மொழியில் மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Rhasi kanna

இதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின் கதாநாயகியாக உயர்ந்து தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழில் முதன் முதலில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு பின்பு அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்பதால் பட வாய்ப்புகள் குறைந்தது. இதனை அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ராசி கன்னா. இதுபோன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வான நடிகையாக இருந்து வருகிறார் ராசி கன்னா.

Rhasi kanna

அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹாலிவுட்டில் நடிக்க போறீங்களா என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.