தமிழகம் சினிமா

பிரியா பவானி சங்கரா இது! ரசிகர்களை கண்சிமிட்ட மறக்க வைக்கும் புதிய புகைபடங்கள்.!

Summary:

actress priya pavani shanker - new photos release

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள ப்ரியா பவானி சங்கர் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இயக்குனர்கள் இதை பார்த்தால் புதிய பட வாய்ப்புகள் குவியும் என்றே கூறலாம்.


Advertisement