சினிமா

பிரபல நடிகரின் வீட்டை பூட்டி சீல் வைத்த அரசு! இதான் காரணமா?

Summary:

Actress praphas house sealed by government

இந்திய சினிமாவின் மிகவும் பிரமாண்ட திரைப்படம் என்றால் அது பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2. பிரமாண்ட இய்குனார் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்திருந்தார். பிரபாஸின் சினிமா பயணத்தில் பாகுபலி திரைப்படம் மிகவும் முக்கியமான ஓன்று.

தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து படங்களிலும் கமிட்டாகிவிட்டார். இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள அவரது கெஸ்ட் ஹவுஸை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

ரயாதுர்காம் பகுதியில் 83 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு சென்றது, தற்போது தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வந்ததால் அந்த பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த இடத்தில் பிரபாஸின் வீடும் அடங்கியுள்ளதாம், இதனால் அந்த வீட்டை அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துவிட்டார்களாம்.


Advertisement