சினிமா

இதுக்கெல்லாம் அப்போ சிரிச்சாங்க ! இப்போ...உலகையே ஆட்டிபடைக்கும் கொரோனா! நடிகை ப்ரணிதா வெளியிட்ட சர்ச்சை பதிவு!

Summary:

Actress pranitha tweet about corono awarness

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி இதுவரை 170க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா  வைரஸை தடுக்க நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தூய்மையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களையும் பல தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சகுனி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரணிதா இந்து பழக்கவழக்கங்கள் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

நடிகை பிரணிதா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்து மக்கள் அனைவருக்கும் வணக்கம் கூறியபோதும், வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவதற்கும், விலங்குகள் மற்றும் மரங்களை வணங்குவதை கண்டும் சிரித்தார்கள், அதேபோல இந்து மக்கள் சைவம் சாப்பிட்டதற்கும், யோகா செய்வதற்கும் , இறப்பவர்களை  எரிப்பதற்கும் , இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வந்து குளிப்பதற்கும் சிரித்தார்கள். ஆனால் இப்பொழுது அனைவரும் சிந்திக்கிறார்கள். இந்து என்பது மதம் இல்லை. அதுதான் வாழ்க்கைக்கான வழியை அமைக்கிறது  என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்


Advertisement