தாய்மை அடைந்ததும், முதலில் இதை தான் செய்யணுமாம்.! சூர்யா பட நடிகையின் சூப்பர் அட்வைஸ்.!

தாய்மை அடைந்ததும், முதலில் இதை தான் செய்யணுமாம்.! சூர்யா பட நடிகையின் சூப்பர் அட்வைஸ்.!


actress pranitha after pregnant advice

நடிகை பிரணிதா தாய்மை அடைந்ததை வெளிப்படுத்தும் வகையில், பதிவிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

கன்னட திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரணிதா. இவர் கன்னட திரைப்படங்கள் மட்டுமின்றி, தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாகி புகழின் உச்சியில் இருந்த தருணத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் நிதின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இது அவருடைய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், தற்போது நடிகை பிரணிதா சில நாட்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

மேலும், 'பெண்கள் தாய்மை அடைந்ததும் முதலில் செய்ய வேண்டிய வேலைகள் என்ன?' என்பதனை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "பெண்கள் தாய்மை அடைந்தவுடன் முதலில் ஒவ்வொரு மாதமும், தங்களது வயிற்றை நன்றாக பார்க்க வேண்டும். அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி மிகப்பெரியது" என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அவர் தாய்மை அடைந்ததை வெளிப்படுத்தும் வகையில், தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.