சினிமா

அப்பப்பா... அப்டி பார்க்காதீங்க.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் லுக்..!

Summary:

அப்பப்பா... அப்டி பார்க்காதீங்க.. பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் லுக்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாஜ்வா. தமிழில் கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். 

தமிழில் அறிமுகமாவதற்கு முன்னதாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாகவும் நிலைநிறுத்திக்கொண்டார். தெனாவட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் போல நடித்து ரசிகர்களை இன்று வரை கவர்ந்து வைத்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை படங்களிலும் நடித்துள்ளார். இதற்குப்பின்னர், திரையுலகில் பெரிதும் நடிக்காமல் இருந்த பூனம், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்திருந்தார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் சிறிய கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார். 

ஆம்பள படத்தில் முதல் பாடலுக்கு கவர்ச்சி உடையுடன் பூனம் ஆடிய குத்தாட்டத்தை பார்த்து இன்று வரை ரசிகர்கள் பரிதவித்து கிடக்கின்றனர். இதன்பின்னர், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய் படத்திலும் நடித்திருக்கிறார். 

கடந்த சில வருடமாகவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பூனம், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து ரசிகர்களின் வரவேற்பை பெறுவார். அந்த வகையில், தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 


Advertisement