மால தீவில் செம ஹாயாக ரிலாக்ஸ் செய்யும் பீஸ்ட் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!!

மால தீவில் செம ஹாயாக ரிலாக்ஸ் செய்யும் பீஸ்ட் பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!!


Actress pooja hegde in maldives photo viral

தமிழ் சினிமாவில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து அவர் பெருமளவில் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம்  பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற பல படங்கள் உள்ளன. இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலானது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது மாலதீவிற்கு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு ரிலாக்சாக எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.