
actress nevatha bethuraj - commet hollywood
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். படம் மாபெரும் வெற்றிபெற்றதால் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.
முதல் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கிறது.
இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார், அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது. இவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா பறக்க உள்ளார் நிவேதா. மேலும் வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகள் பாலிவுட் சினிமாவிலேயே கால் வைக்காத நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் ஹாலிவுட் திரையில் தோன்ற உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
Advertisement