நயன்தாராவா இது?? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்!! எப்படி உள்ளார் பார்த்தீங்களா...
நயன்தாராவா இது?? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்!! எப்படி உள்ளார் பார்த்தீங்களா...

தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா நகைக்கடை விளம்பரத்துக்காக சமீபத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகி என்ன நடிகை நயன் இப்படி ஆகிட்டீங்களே எனவும், மேலும் கிண்டலாக நயன்தாரா பாட்டியாகிவிட்டார் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.