சிம்புவை கட்டியணைத்து, தனுஷ்சை கன்னம் உரசியப்படி நடிகை நயன்தாரா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்...

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.
அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக,லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன் நயன்தாரா, சிம்பு, தனுஷ், அனிருத் இவர்கள் அனைவரும் ஒன்றாக இனைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த புகைப்படத்தில் சிம்புவை கட்டி அணைத்தவாறு, தனுஷின் கன்னம் உரசியவாறு நயன்தாரா இருக்கும் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்...