அப்படிப்போடு.. நயன் - விக்கியின் திருமண டீசரை வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்..! உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்..!!

அப்படிப்போடு.. நயன் - விக்கியின் திருமண டீசரை வெளியிட்டது நெட்ப்ளிக்ஸ்..! உற்சாகத்தில் பொங்கும் ரசிகர்கள்..!!


Actress Nayan director wikki marriage teaser

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்காக கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு ஹோட்டலை வாடகைக்கு எடுத்திருந்தனர். 

திருமணத்தில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும் அட்லி, அஜித், சூர்யா, ஜோதிகா, ஷாலினி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் பங்கேற்ற நிலையில், இத்திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் வாங்கியிருந்தது. 

actress nayanthara

மேலும், Nayanthara Beyond the Fairytale என்ற தலைப்பில் நெட்ப்ளிக்சில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில், திருமணத்தின் டீசரை தற்போது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் உற்சாகத்தில் பொங்கி வருகின்றனர்.