அடேங்கப்பா! என்றும் இளமை நடிகை நதியாவின் மகள்களை பார்த்துருக்கீங்களா! அழகில் அம்மாவையே ஓரம் கட்டிட்டாங்களே!

அடேங்கப்பா! என்றும் இளமை நடிகை நதியாவின் மகள்களை பார்த்துருக்கீங்களா! அழகில் அம்மாவையே ஓரம் கட்டிட்டாங்களே!



actress-nathiya-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நதியா.அதனை தொடர்ந்து அவர் உயிரே உனக்காக , நிலவே  மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் 1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து  கொண்டார். அவர்களுக்கு சனம்,  ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நீண்ட நாட்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நடிகை நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை நதியா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவரது இரு மகள்களும் என்றும் இளமையாக இருக்கும் தனது அம்மாவையே மிஞ்சும் அழகில் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.