பள்ளி படிக்கையில் கர்ப்பமான அட்டகத்தி நடிகை நந்திதா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இத்திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, அசுரவதம் என பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் விஜய்யுடன் புலி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நந்திதா.
சமீபத்தில் நந்திதா ஸ்வேதா நடித்து வெளிவந்த படம் அசுரகுலம். தற்போது நந்திதா நர்மதா என்ற படத்தில் நடிக்கிறார். இது ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி, குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் கதை. நந்திதா இதில் பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என 3 விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடன் விஜய் வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்குகிறார். இதுவரை பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்து வந்த நந்திதாவுக்கு இந்தப் படம் இன்னொரு தோற்றத்தை கொடுக்கும் என்கிறார்கள்.