அடேங்கப்பா..சூப்பர் ஹிட் வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இத்தனை பேர் மிஸ் பண்ணிட்டாங்களா! அதுவும் யாரெல்லாம் பார்த்தீங்களா!!

அடேங்கப்பா..சூப்பர் ஹிட் வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை இத்தனை பேர் மிஸ் பண்ணிட்டாங்களா! அதுவும் யாரெல்லாம் பார்த்தீங்களா!!


actress-miss-vali-movie

தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர நாயகனாக ஜொலித்து வரும் தல அஜித் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் கொடுத்த திரைப்படம்தான் வாலி. இப்படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்கியுள்ளார்.

வாலி திரைப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் அசத்தலாக நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க படக்குழு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த கிரண் என்பவரைதான் அணுகியுள்ளனர்.

Vaaliஆனால் அவர் நடிக்க மறுத்த நிலையில் நடிகை மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவரும் மறுப்பு தெரிவித்துள்ளாராம். பின்னரே இறுதியாக சிம்ரனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஜோதிகா கதாபாத்திரத்திலும் நடிக்க முதலில் மீனாவிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.