சினிமா

தோனியை காதலித்தது உண்மையா? பிரபல நடிகை பதில்!

Summary:

Actress lakshmi rai talks about love with dhoni

இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி உலக அளவில் பிரபலமானவர் தல தோணி. இவருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியை உலக அளவில் தலைநிமிர வைத்த பெருமை நம்ம தோனியை சேரும். நாட்டிற்காக இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார் தல தோணி.

இந்திய அணிக்காக மட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகவும் விளையாடி வரும் தோனிக்கு தமிழகத்தில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் போது நடிகை ராய் லட்சுமியுடன் காதலில் இருந்ததாக அப்போது ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.

இதுபற்றி நடிகை லட்சுமி ராயிடம் கேட்டபோது அதெல்லாம் பழைய நினைவுகள்,தற்போது அவருக்கு சாக்ஷியுடன் திருமணமாகி,அழகான குழந்தை உள்ளது.அதைப்பற்றி தற்போது பேச வேண்டாம்.

நான் அவர்மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துளேன் என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.


Advertisement