சினிமா

78 வயதிலும் எம்புட்டு அழகு... முதல்முறையாக அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ...!

Summary:

78 வயதிலும் எம்புட்டு அழகு... முதல்முறையாக அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ...! இதுதான் காரணமா....

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகையும் கூட இவர்.  ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கை, அரசியல் என பிஸியாகிவிட்டார். நடிகை குஷ்பு வெள்ளித்திரை படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் களமிறங்கி அசத்தலாக நடித்துள்ளார். அவர் இதற்கு முன்பு குங்குமம் கல்கி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார்.  மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் தொடரில் நடித்து மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை  குஷ்பூ, தனது குடும்ப  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவார். இந்நிலையில் அவர், தற்போது முதல்முறையாக தனது அம்மாவின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த  புகைப்படம் இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...

 


Advertisement