புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இவ்வளவு கஷ்டங்களா.! 8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தல்.! நடிகை குஷ்பு பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பின்னர் வெள்ளித்திரை, சின்னத்திரை என கலக்கிய அவர் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது சொந்த வாழ்க்கை குறித்த பல அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, ஒரு குழந்தை தனது இளம வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அந்த காயம் வாழ்நாள் முழுவதும் மாறாத வடுவாக தொடரும். எனது தந்தை மனைவியை அடிப்பது, குழந்தையை துன்புறுத்துவதுதான் தனது பிறப்புரிமை என நினைத்திருந்தார். எனது அம்மா மோசமான திருமண வாழ்க்கையை அனுபவித்தார்.
8 வயதில் எனது தந்தை எனக்கு பாலியல் துன்புறுத்தலை செய்தார். எனது குடும்பத்தினர்கள் என்ன நினைப்பார்களோ, கணவரே கடவுள் என நினைக்கும் என் அம்மா நம்புவாரோ என்ற தயக்கத்தில் இதுகுறித்து நான் யாரிடமும் கூறாமல் இருந்தேன்.
பின் 15 வயதில் அவருக்கு எதிராக பேசும் தைரியத்தை நான் வளர்த்து கொண்டேன். என்ன நடந்தாலும் தைரியத்தோடு போராட வேண்டும் என அவரை எதிர்க்க துவங்கினேன். பின் எனது 16 வயதில் அவர் எங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அடுத்த வேலை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம் என அவர் கூறியுள்ளார்.