லவ் யூ பட்டு.! வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்.! மனமுடைந்து போன நடிகை குஷ்பூ.! வைரலாகும் எமோஷனல் பதிவு!!

லவ் யூ பட்டு.! வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்.! மனமுடைந்து போன நடிகை குஷ்பூ.! வைரலாகும் எமோஷனல் பதிவு!!


Actress kushbu pet dog is dead viral emotional tweet

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தொடர்ந்து அவர் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்திகா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். குஷ்பூ தற்போது சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கி பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தன் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்துவிட்டநிலையில் அதன் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்ட எமோஷனல் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராய் நீ இருந்தாய். ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வந்த நீ, எங்களது இதயத்தில் நீங்காத இடம்பிடித்துவிட்டாய். உனது புரிதல், நிபந்தனையற்ற அன்பு, உனது புன்னகை, சில சமயங்களில் கோபம், பாதுகாக்கும் இயல்பு, கீழ்ப்படியும் குணம் ஆகியவை எங்களது இதயத்தை கவர்ந்தன. உனது இறப்பால் நாங்கள் மனமுடைந்துபோயுள்ளோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம். மிஸ் யூ ஸ்னூபி. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகின்றனர்.