அட.. நடிகை குஷ்புவா இது! பாலிவுட் பிரபலத்துடன் லிப்-லாக்! வைரலாகும் புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!actress-kushbu-liplock-with-bollywood-actress-farah

தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் ரஜினி, கமல் விஜயகுமார், சரத்குமார் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பு. நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் மீது கொண்ட அளவற்ற அன்பால் ஒருகாலத்தில் அவரது ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இவ்வாறு வெள்ளித்திரையில் கலக்கிய குஷ்பூ சின்னத்திரையிலும் களமிறங்கி பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை குஷ்பூ இளம் வயதில் சில படங்களில் படு கிளாமராக நடித்துள்ளார். இந்நிலையில் குஷ்பு பாலிவுட்டின் பிரபல நடிகையான பாராஹ்வுக்கு லிப்லாக் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.