சினிமா

ரசிகர் செய்த இந்த செயலை என் வாழ்வில் மறக்கவே முடியாது.! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்...

Summary:

Actress keerthi sursh open talk

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கண்ணியாக நிகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கென இளைஞர்கள் பட்டாளம் அதிகம். 

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் அண்மையில் OTTயில் வெளியான பென்குயின் படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி தனது பழைய அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு நாள் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது ரசிகர் ஒருவர் கீர்த்தியின் கையில் அழகான போட்டோ ஆல்பத்தையும், கடிதத்தையும் கொடுத்தார். அதனை பிரித்து பார்த்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 

அந்த கடிதத்தில் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என எழுதியிருந்தது. யார் என்றே தெரியாத நபர் கொடுத்த அந்த கடிதம் என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார். 

 

 


Advertisement