இந்த சின்ன குழந்தை எந்த முன்னணி நடிகை தெரியுமா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!?Actress keerthi suresh childhood photos with her sister

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

keerthi

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் முதன் முதலில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாகவே இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவார்.

keerthi

மேலும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டு இருந்த புகைப்படம் கூட இணையத்தில் வைரலாக பரவியது. இதனை அடுத்து தற்போது கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.