இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது! மகன் பலி! மோசமான நிலையில் கணவருக்கு சிகிச்சை! சோகத்தில் பிரபல நடிகை!!

இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது! மகன் பலி! மோசமான நிலையில் கணவருக்கு சிகிச்சை! சோகத்தில் பிரபல நடிகை!!


actress-kavitha-son-dead-by-corono

1976ம் ஆண்டு வெளிவந்த ஓ மஞ்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கவிதா.அதனை தொடர்ந்து அவர் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான் காதலி, அல்லி தர்பார், நாடோடி தென்றல், வைதேகி கல்யாணம், நட்சத்திர நாயகன், செந்தமிழ் பாட்டு என பல படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.

அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை கவிதா சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்து வந்தார்.

corono

இந்நிலையில் இவரது மகன் சஞ்சய் ரூப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை தொடர்ந்து நடிகை கவிதாவின் கணவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உடல் நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் உயிரிழந்தார். கணவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இந்நிலையில் மிகுந்த வேதனையில் இருக்கும் நடிகை கவிதாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

corono