அடேங்கப்பா.. இந்த வயசுல இப்படியொரு ஆட்டமா? இறுக்கமான உடையில் அந்த பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி.! தீயாய் பரவும் வீடியோ!!

அடேங்கப்பா.. இந்த வயசுல இப்படியொரு ஆட்டமா? இறுக்கமான உடையில் அந்த பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி.! தீயாய் பரவும் வீடியோ!!


actress-kasthuri-dance-in-ground-video-viral

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. இப்படத்தை  தொடர்ந்து அவர் டாப் ஹீரோக்களாக வலம் வந்த சத்யராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பலருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை கஸ்தூரி 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது 47 வயது நிறைந்த அவர் சில முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது TNPL போட்டியில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறாராம். அங்கு விளையாட்டுத்திடலில் அவர்  இறுக்கமான ஆடையணிந்து புஷ்பா பட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த  வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் இந்த வயசுல இப்படியொரு ஆட்டமா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.