சினிமா

படவாய்ப்பு இல்லை.. சன் டிவி சீரியலில் களமிறங்கும் பிரபல அஜித் பட நடிகை! யார்னு பார்த்தீங்களா!!

Summary:

சினிமா துறையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரும் மார்க்கெட் குறைந்த பிறகு

சினிமா துறையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலரும் மார்க்கெட் குறைந்த பிறகு தொலைக்காட்சி தொடர்களில் களமிறங்குவர். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பட படங்களிலும் நடித்துள்ள நடிகை கனிகா தற்போது சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதனைத் தொடர்ந்து அவர் எதிரி, ஆட்டோகிராப் மற்றும் அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணமாகி செட்டிலான அவர் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 

Again Kanika! || மீண்டும் கனிகா!

இந்த நிலையில் நடிகை கனிகா தற்போது சின்னத்திரை பக்கம் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அவர் சன் டிவியில், தேவயானி நடிப்பில் வெளிவந்த கோலங்கள் சீரியலின் மூலம் பிரபலமான திருச்செல்வன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement