தளபதி விஜய்யின் படத்தில் எதிர்நீச்சல் நாயகி.! இணையத்தில் பரவும் புகைப்படம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதி விஜய்யின் படத்தில் எதிர்நீச்சல் நாயகி.! இணையத்தில் பரவும் புகைப்படம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!



actress-kanika-act-in-goat-movie-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் இதுவரை GOAT படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தின் முதல் பாடல் வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் GOAT படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

vijay

தற்போது சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை கனிகா. இதற்கு முன்பு அவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கனிகா Greatest Of All Time படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.